தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெய் பீம், உடன்பிறப்பே... அமேசானில் வரிசைக்கட்டும் தமிழ் படங்கள்

சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூர்யாவின் ஜெய் பீம் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகவிருக்கின்றன.

pprime
pprime

By

Published : Aug 5, 2021, 11:49 AM IST

Updated : Aug 5, 2021, 12:03 PM IST

கரோனா தொற்றால் கடந்த ஆண்டிலிருந்து சினிமா திரையரங்குகள் பெரிதாக இயங்கவில்லை. இதனால் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகியுள்ளது.

சூர்யா நடித்த சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் என பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக ஆரம்பித்திருப்பதால் அதன் பங்கு தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புதிதாக நான்கு தமிழ் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

அதன்படி, சூர்யா நடிப்பில் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் மாதத்திலும், சரவணன் இயக்கத்தில் சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் உடன்பிறப்பே திரைப்படம் அக்டோபர் மாதத்திலும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அதேபோல், அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் செப்டம்பர் மாதத்திலும், சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகிவரும் ஓ மை டாக் திரைப்படம் டிசம்பர் மாதத்திலும் பிரைமில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு படங்களையும் சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

Last Updated : Aug 5, 2021, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details