இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழ் திரையுலகுக்கு இந்த மாதம் மிக மோசமான மாதமாக மாறியிருக்கிறது.
இந்த மாதம் (ஏப்பரல்) மட்டும் தமிழ் திரையுலகில் நான்கு பிரபலங்கள் நெஞ்சுவலி, கரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் 17ஆம் தேதி நகைச்சுவை நடிகர் விவேக் (59) நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
'ரெட்டச்சுழி', 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களை இயக்கிய தாமிரா (53) ஏப்ரல் 27ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.