தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்னது வலிமை படத்தில் நான்கு ஹீரோயின்களா? - ajith valimai movie

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் நான்கு நடிகைகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னது வலிமை படத்தில் நான்கு ஹீரோயின்களா?
என்னது வலிமை படத்தில் நான்கு ஹீரோயின்களா?

By

Published : Jan 21, 2020, 12:23 PM IST

நேர்கொண்ட பார்வை பட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். வலிமை என்று பெயரிட்டுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. வலிமை படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தில் கீர்த்தி சுரேஷ், இலியானா, ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஏற்கனவே வலிமை படத்தில் யாமி கெளதம் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என்று தகவல் வெளியானது. அப்படி இருக்கும் சூழலில் கூடுதலாக, மேலும் மூன்று நடிகைகளின் பெயர் அடிப்படுவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதே போன்று வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்கவுள்ளதாக தகவல் பரப்பப்பட்டன. இது குறித்து பிரசன்னாவிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்ப, உடனே அவர் அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார். அந்த டீவீட்டில் , 'வலிமை படக்குழு தன்னிடம் படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை' என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: உருவாகும் 'அரண்மனை 3': நாயகன் நயாகி இவர்களா...?

ABOUT THE AUTHOR

...view details