தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருபவர் ஸ்ரதா கபூர். இரு பெரும் முன்னணியாளர்கள் நடிக்கும் 'சாஹோ' படம் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
எட்டு நிமிட காட்சிக்காக ரூ.70 கோடியா..? - பிரபாஸ்
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' திரைப்படத்தின் எட்டு நிமிட சண்டை காட்சிக்கு ரூ.70 கோடியை படக்குழுவிற்கு தயாரிப்பாளர் நிறுவனம் வழங்கியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் படத்தின் ஸ்நீக் பிக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் படத்தில் வரும் எட்டு நிமிட சண்டை காட்சிக்காக ரூ.70 கோடி செலவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இச்சண்டை காட்சி அபுதாபியில் எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சண்டை காட்சிக்காக பிரபாஸ், ஸ்ரதா இருவரும் கடுமையான பயிற்சி பெற்றதாக படக்குழு கூறியுள்ளது. படத்தில் வரும் சண்டை காட்சி கென்னி பேட்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் மதியின் கேமரா கைவண்ணம் படம் முழுவதும் விளையாடியுள்ளது. எட்டு நிமிட சண்டை காட்சியில் பைக் மூலம் கார், டிராக்டரை சேஸ் செய்வது போல் அமைந்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.