மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து குஞ்சன் சக்ஸேனா, ரூஹி படங்களின் மூலம் கவனம் ஈர்த்துள்ள ஜான்வி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாகவும் லைம் லைட்டிலும் இருந்து வருகிறார்.
குறிப்பாக கரோனா காலத்தில் தன் வகேஷன் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை குதூகளிப்பில் ஆழ்த்திவந்த ஜான்வி, முன்னதாக இன்ஸ்டாகிராமில் தனது அடுத்த வகேஷன் படத்தினை வெளியிட்டுள்ளார்.