தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட 'ஃப்ளிக்ஸ்டா' ஓடிடி டிஜிட்டல் தளம் - ஃப்ளிக்ஸ்டா

சென்னை:  தமிழில் புதிதாக 'ஃப்ளிக்ஸ்டா' என்னும் ஓடிடி டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

ஃப்ளிக்ஸ்டா
ஃப்ளிக்ஸ்டா

By

Published : Jun 23, 2020, 3:04 PM IST

கரோனா தொற்று காரணமாக பல நாடுகள் இன்னும் பொதுமுடக்கத்தில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் பொதுமக்களுக்கு ஓடிடி என்னும் டிஜிட்டல் தளம் புதிய அனுபவத்தை தருகிறது. இதில் இணைய தொடர்கள், படங்கள் என மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

ஏற்கனவே நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் உள்ள நிலையில், தமிழில் தற்போது புதிதாக ’ஃப்ளிக்ஸ்டா’ (Flixdaa) என்னும் புதிய ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உலகத்தரமான சீரிஸ்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், ஸ்டேண்டப் காமெடி எனும் இடைவிடாத நகைச்சுவை நிகழ்ச்சி, இசை ஆல்பங்கள், நகைச்சுவை துணுக்கு வீடியோக்கள், சமையல் வீடியோக்கள் குழந்தைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள் பிரத்யேகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் என எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன.

இது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் தளமாக உள்ளது. இத்தளத்தில் உங்கள் மெயில் ஐடியை பகிர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பார்வையாளர்கள் இந்த தளத்தை முழுமையாக இலவசமாக காணலாம்.

இதையும் படிங்க:அமிதாப் பச்சனின் குலாபோ சீதாபோ கதாபாத்திரம் உண்மையா?

ABOUT THE AUTHOR

...view details