தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#HBDKAJOL... நடிகை மட்டுமில்லை கவிஞரும்கூட - கஜோல் சீக்ரெட்ஸ் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை மட்டுமின்றி கஜோல் ஒரு கவிஞரும்கூட. படங்களில் நடிக்கும் நேரம் தவிர்த்து அதிக நேரம் செலவிடுவது கவிதைகளுக்குத்தான்.

கஜோல்
கஜோல்

By

Published : Aug 5, 2021, 6:57 AM IST

மும்பையில் பிறந்து வளர்ந்து தனது 17 வயதில், ’பெக்குடி’ படம் மூலம் இந்தி சினிமாவில் நுழைந்து முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை அடைந்தவர் கஜோல்.

இந்தி படங்களில் மட்டுமின்றி 'மின்சார கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர் தனது 47ஆவது பிறந்தநாளை இன்று (ஆகஸ்ட் 5) கொண்டாடுகிறார்.

இதனையொட்டி அவருக்கு சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் இன்றைய பிறந்தநாளில் அவர் குறித்து பெரிதும் வெளியில் தெரியாத விஷயங்கள்:

கஜோல்

கஜோல் குறித்து தெரியாத விஷயங்கள்

*கஜோல் தீவிர சிவ பக்தர். தன் கையில் எப்போதும் ஓம் என்ற மோதிரத்தை அணிந்திருப்பார்.

*அவர் அனைவரிடமும் எளிமையாகப் பழகுவதுபோல் தெரிந்தாலும், தனக்கு என்ற ஒரு சிறிய வட்டம் மட்டுமே வைத்திருப்பார்.

*அவர் நடித்த கதாபாத்திரத்திலேயே மனதிற்குப் பிடித்த ஒன்று என்றால், குப்த்தில் நடித்த ஈஷா திவான்.

* கஜோலின் தாய் அவரை ”காட்ஸ்” என்று அழைப்பார்.

* நடிகை மட்டுமின்றி கஜோல் ஒரு கவிஞரும்கூட. படங்களில் நடிக்கும் நேரம் தவிர்த்து அதிக நேரம் செலவிடுவது கவிதைகளுக்குத்தான்.

கண்களுக்கெனவே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்திருக்கும் கஜோலுக்கு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி, #HBDKAJOL என்ற ஹேஷ்டாக்கையும் உருவாக்கி ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:HBD தலைவாசல் விஜய் - ரசிகர்கள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details