ஹைதராபாத்: பல மாதங்களாக நீடித்துவந்த பலரது யூகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. ஆம் பாலிவுட் ஜோடியான விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் இன்று (டிசம்பர் 9) திருமணம் செய்துகொண்டனர்.
இந்த சுப நிகழ்ச்சி ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள ரிசார்ட்டாக மாற்றப்பட்ட கோட்டையில் நடைபெற்றது. இத்திருமணத்தில் கலந்துகொள்வோர் புகைப்படம் எடுக்கக் கூடாது, கோட்டையைச் சுற்றிப் பறக்கும் ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது அவர்களது திருமணத்திற்குப் பிறகு, விக்கி - கத்ரீனாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
வைரலான படங்களில், விக்கி தங்க நிற உடையிலும், கத்ரீனா சிவப்பு சப்யாசாச்சி லெஹங்காவிலும் அழகாக மிளிர்வதையும் காண முடிகிறது. பின்னர் இன்று மாலை பார்வாரா கோட்டையின் ஷீஷ் மஹால் பகுதியில் நடந்த விழாவில் இந்த நட்சத்திர ஜோடி கலந்துகொண்டது.