'நான் ஈ', 'புலி' உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த கிச்சா சுதீப் கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது கன்னடத்தில் வெளியாகவிருக்கும் 'பயில்வான்' என்னும் திரைப்படத்திற்காக தனது உடலை பயில்வான் தோற்றத்திற்கு உருமாற்றி நடித்துள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் திரைக்கு வரவிருக்கிறது. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முதல் முறையாக ரிலீஸாகும் கன்னட திரைப்படம்! - பெஹல்வான்
சுதீப் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'பயில்வானின்', ஹிந்தி மொழியாக்க 'பெஹல்வான்' திரைப்படம் முதல் முறையாக நேபால், பூடான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகவுள்ளது.
cinema
'பெஹல்வான்' திரைப்படம் நேபாள், பூடான் ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளது. படத்தின் இயக்குநர் கிருஷ்ணா, கன்னட திரைப்படம் 'பயில்வான்' இந்தியில் 'பெஹல்வான்' என்னும் தலைப்பில் முதல் முறையாக வெளிநாடுகளில் ரிலீஸாவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.