கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாறன்'. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இதில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தனுஷின் 'மாறன்' திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! - மாறன் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
ஜி.வி. பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில்,கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரவுள்ள மாறன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷின் 'மாறன்' திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.
பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள பொல்லாத உலகம் என்ற இப்பாடலை தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.
இதையும் படிங்க:சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் எப்போது?