தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கூகுள் குட்டப்பன்' முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு! - ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் மலையாள திரைப்படம்

சென்னை : தர்ஷன் - லாஸ்லியா நடிப்பில் உருவாகி வரும் 'கூகுள் குட்டப்பன்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Google Kuttappan
Google Kuttappan

By

Published : Mar 13, 2021, 7:00 AM IST

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சராமுடு நடிப்பில் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. பாசத்திற்காக ஏங்கும் தந்தை, வெளிநாட்டிலிருந்து மகன் கொண்டு வரும் ரோபோவுடன் நட்பாகி விடுகிறார். நெகிழ்ச்சியான சுவாரசியமான திரைக்கதையால் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரேவற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்லாது இந்தப் படம் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளையும் வென்றது.

கூகுள் குட்டப்பன் படக்குழுவினர்

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கைப்பற்றினார். இந்தப் படத்தை கே.எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குநர்கள் சபரி, சரவணன் இயக்குகின்றனர். 'கூகுள் குட்டப்பன்' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, மனோபாலா, ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி தென்காசியில் தொடங்கியது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடி!

ABOUT THE AUTHOR

...view details