குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய முத்தையா தற்போது விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் ஆகியோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு புலிக்குத்தி பாண்டி என பெயரிடப்பட்டுள்ளது.
கும்கி ஜோடியின் புதிய படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - Pulikuthi pandi Movie Update
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
![கும்கி ஜோடியின் புதிய படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! கும்கி ஜோடியின் புதிய படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10060879-thumbnail-3x2-kumki.jpg)
கும்கி ஜோடியின் புதிய படம்
இந்நிலையில், இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14ஆம் தேதி சன் டிவியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதன் பின்பு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ சிங்கிள் டிராக் நாளை வெளியீடு