தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பவித்ரா-ரியோ ராஜ் ஆல்பம் பாடல் அப்டேட் வெளியீடு - கண்ணம்மா என்னம்மா

பவித்ரா, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள ஆல்பம் பாடலின் அப்டேட் நாளை (ஜூலை 20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ ராஜ்
ரியோ ராஜ்

By

Published : Jul 19, 2021, 9:24 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் பவித்ரா, ரியோ ராஜ். இவர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை மட்டுமின்றி படங்களிலும் நடித்துவருகின்றனர்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். 'கண்ணம்மா என்னம்மா' எனத் தொடங்கும் இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் பாடியுள்ளார். பாடலுக்கு தேவ் இசையமைத்துள்ளார்.

இப்பாடலின் டீசர் நாளை (ஜூலை 20) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க:தர்பார் திருவிழா: ரஜினிஃபைட் ஜப்பான் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details