ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் சிறப்பான கதைகள் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது FIR திரைப்படம் உருவாகியுள்ளது. கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.
இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், இயக்குநர் கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார்.
FIR திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என ஒரேநேரத்தில் இப்படம் வெளியாகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி இருக்கும் இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க:சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவை புரிந்துகொள்ள வேண்டும் - நடிகர் ஆரி