'வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா', 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை', 'குள்ளநரி கூட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றிகள் பல கண்டுள்ளார் விஷ்ணு விஷால். இவரது 'ராட்சசன்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில் அவரது திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகளை அவர் சந்தித்தாலும், திரைப்படங்களின் மீதுள்ள ஆர்வம் தொடர்ந்து அவரை சோர்வடையாமல் வைத்திருந்தது. 'காடன்', 'ஜகஜால கில்லாடி' படங்களைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் 'எஃப்ஐஆர்', இதனுடைய விளக்கமே முதல் தகவல் அறிக்கை. ஆனால் போஸ்டரில் ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என்று குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக இப்படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்த முக்கியத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.