மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின், பாந்த்ரா காவல் நிலையத்தில் (Bandra police station) நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "எஸ்.எஃப்.எல். ஃபிட்னஸ் (SFL Fitness) நிறுவன இயக்குநர் காசிப்கான், ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா ஆகியோர் 2014ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தில் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுமாறு கேட்டனர். அவர்கள் எஸ்.எஃப்.எல். ஃபிட்னஸ் நிறுவனம் சார்பாக எனக்கு ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை நடத்துவதற்கான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, ஏமாற்றிவிட்டனர்.
பணத்தைக் கேட்டால் கொடுக்காமல் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா காவல் துறையினர் சிப்கான், ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.