தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தர்மதுரை' பாகம் 2 இயக்கப்போவது யார்?- சீனுராமசாமி விளக்கம் - சீனு ராமசாமியின் தர்மதுரை

'தர்மதுரை ’ படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கவில்லை என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Seenu Ramasamy
Seenu Ramasamy

By

Published : Oct 18, 2021, 3:06 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தர்மதுரை'. சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே 'தர்மதுரை' பாகம் 2 தயாராக இருப்பதாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் அக்டோபர் 14ஆம் தேதி தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். தர்மதுரை 2 சீனு ராமசாமி இயக்குவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில், சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், " தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.

அதில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சீனு ராமசாமியின் லட்சுமி தியேட்டர் நினைவலைகள்!

ABOUT THE AUTHOR

...view details