தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'லங்கேஷ்' கதாபாத்திரம் நிறைவு: கொண்டாடிய 'ஆதிபுருஷ்' படக்குழு! - ஆதிபுருஷ் வெளியாகும் தேதி

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த சைஃப் அலி கானின் பகுதி முழுமையாக முடிவடைந்துள்ளது.

Adipurush
Adipurush

By

Published : Oct 9, 2021, 11:36 AM IST

'தன்ஹாஜி' படத்தையடுத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், 'ஆதிபுருஷ்'. 'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியைப் படமாக்கும் இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் 'ஆதிபுருஷ்', மிக பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இப்படம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜூலை மாதம் மீண்டும் படப்பிடிப்பை ஆதிபுருஷ் படக்குழு ஆரம்பித்தது. படத்தில் சைஃப் அலிகான் 'லங்கேஷ்' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் இந்த கதாபாத்திரம் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து படக்குழு அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளது. அப்போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் ஓம் ராவத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சைஃப் அலிகான் கூறுகையில், பிரபாஸூடன் இணைந்து பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். அவரை நான் இன்னும் பாகுபலியாகவே பார்கிறேன். இந்த படத்தில் அவர் ராமராக நடிப்பது முற்றிலும் வித்யாசமாக இருந்தது.

அதுமட்டுல்லாது பிரபாஸ் மிகவும் வேடிக்கையான மனிதர். எங்கள் இருவருக்கும் வரும் சண்டை காட்சிகளில் படப்பிடிப்பில் சீரிஸாக இல்லாமல் எப்போது சிரித்துக்கொண்டே இருப்போம். பிரபாஸ் உண்மையில் ஒரு ஜென்டில் மேன் என்றார். ஆதிபுருஷ் திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: ஆதிபுருஷ் விவகாரம்: மன்னிப்பு கேட்ட சைஃப் அலி கான்

ABOUT THE AUTHOR

...view details