தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மனைவியின் மறைவுக்கு போனிகபூர் இரங்கல் - போனிகபூர் இரங்கல்

சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மனைவியின் மறைவுக்குத் தயாரிப்பாளர் போனிகபூர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Boney Kapoor
Boney Kapoor

By

Published : May 17, 2021, 8:40 PM IST

'ராஜா ராணி' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர், அருண்ராஜா காமராஜ். தனது முதல் படத்திலேயே தனிக்கவனம் பெற்றார். இவர் நடிப்பு மட்டுமின்றி 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'காக்கிசட்டை', 'தெறி', 'கபாலி', 'காலா', 'மாஸ்டர்', 'தர்பார்' போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 'கபாலி' படத்தின் தீம் பாடலான 'நெருப்புடா' பாடல், இவர் எழுதி பாடியதையடுத்து ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் அருண்ராஜா காமராஜ் நடிகராக, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வந்த இவர், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து 'கனா' என்னும் படத்தை இயக்கியதின் மூலம் இயக்குநராகவும் தற்போது வலம் வருகிறார். அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதியை வைத்து 'ஆர்டிகிள் 15' என்னும் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தை அஜித்தின் 'வலிமை' பட தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (மே.16) உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அருண்ராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை தாங்க கடவுள் உங்களுக்குப் பலம் அளிப்பார். அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்குக் கீழ், வழக்கம் போல் நெட்டிசன்கள் 'வலிமை' பட அப்டேட் கேட்டு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details