திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நயனா சூரியன்(29). இவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் என்பவரிடம் துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். மேலும் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இன்று அவரது தாயாரான ஷீலா செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார், நயனா தங்கியிருந்த அறைக்குச் சென்று கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை.
பெண் துணை இயக்குநர் மர்மமான முறையில் மரணம்! - மரணம்
திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட பெண் துணை இயக்குநர் மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, நயனா இறந்து கிடந்தார்.அதிர்ச்சியடைந்த ஷீலா உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நயனா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நயனாவிற்கு நீரிழிவு நோய் இருந்துள்ளதும், அதற்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்ததும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.