தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அது கண்டிக்கத்தக்கது - ஆர்.கே. செல்வமணி - vijay sethupathi to act in Muttiah Muralitharan biopic

தமிழர்கள் பற்றி இழிவாக கருத்து தெரிவித்துவரும் 'முத்தையா முரளிதரன்' வாழ்க்கை பற்றிய படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அது கண்டிக்கத்தக்கது. அதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்தி பேசவுள்ளோம் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் கண்டிக்கத்தக்கது - ஆர்கே செல்வமணி

By

Published : Sep 17, 2019, 9:15 AM IST

Updated : Sep 17, 2019, 3:37 PM IST

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி,

"சென்னையை அடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கும் பையனூர் ஃபிலிம் சிட்டியில் அம்மா படப்பிடிப்புத்தளத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியாக அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் ஐந்து கோடி மதிப்பில் திட்டமிடப்பட்ட அம்மா படப்பிடிப்புத் தளத்துக்கு முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்பணத்தை வைத்து விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

பையனூர் ஃபிலிம் சிட்டியில் அமையவுள்ள அம்மா படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரை திரைத் துறையைச் சார்ந்தவர்கள் எளிதாக அணுக முடிகிறது. தற்போதைய அரசு தமிழ் சினிமாவுக்கு இணக்கமான அரசாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

அம்மா படப்பிடிப்பு தளத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய தமிழக முதல்வருக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன சார்பில் நன்றி
தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பேசிவருபவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் ஃபெப்சி அமைப்பு, படத்துக்கு ஆதரவாக இருக்குமா எனும் செய்தியாளர் கேள்விக்கு, முத்தையா முரளிதரன் வாழ்க்கை பற்றிய படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அது கண்டிக்கத்தக்கது என்றார்.
முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் கண்டிக்கத்தக்கது
தமிழ்நாடு முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் கேப்மாரின்னா சிஎம் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பட தலைப்பு வைக்கலாமா என்ற கேள்விக்கு, இது பற்றி தனக்குத் தெரியாது என்றும் இது தொடர்பாக மற்ற சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பட சர்ச்சை தலைப்பு குறித்து ஆர்கே செல்வமணி கருத்து
Last Updated : Sep 17, 2019, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details