தெலுங்கு சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் 'ரகுபதி வெங்கையா நாயுடு' வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, அதே பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. பாப்ஜி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நரேஷ், வாஹினி, தனிகெல்லா பரணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
இந்தப் படத்தின் ட்ரெய்லரை தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, நடிகர் நரேஷ் மற்றும் மொத்த படக்குழுவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.