தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெயம் ரவியின் 25ஆவது படத்தில் இணையும் 'அடங்கமறு' காம்போ! - கோமாளி

ஜெயம் ரவியின் 25ஆவது படத்தில் தந்தையும் மகனும் இணைந்து பணியற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

File pic

By

Published : May 9, 2019, 9:14 AM IST

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'கோமாளி'. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிவரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படம் ஜெயம் ரவிக்கு 24ஆவது படமாகும்.

இதனையடுத்து, ஜெயம் ரவியின் 25ஆவது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை ஜெயம் ரவியை வைத்து 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' படத்தை இயக்கிய 'லக்ஷ்மன்' இயக்க உள்ளார். இந்தப் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'அடங்கமறு' திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக ஸ்டன் சிவா, நடன இயக்குநராக கெவின் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் தந்தை-மகன் ஆவார்.

இந்நிலையில், 'ஜெயம் ரவி 25' படத்திலும் ஸ்டண்ட் இயக்குநராக ஸ்டன் சிவாவும், நடன இயக்குநராக கெவினும் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளனர்.

இது குறித்து, ஸ்டன் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், 'இயக்குநர் லக்ஷ்மன் - ஜெயம் ரவி இணையவுள்ள படத்தில் நானும் எனது மகனும் இணைந்து பணியாற்ற உள்ளோம். ஏற்கனவே ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படத்திலும் நாங்கள் இணைந்து பணியாற்றினோம்' என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details