உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் படம் 'ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்' திரைப்படம். கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் 'ராக்' எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது.
'ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்' சீரிஸின் புதிய டிரெய்லர் வெளியீடு! - Dwayne Johnson
'ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்' வரிசையில் வெளிவரவுள்ள புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'மார்வல்', 'ஹாரி பாட்டர்' போல 'ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்' திரைப்பட வரிசைக்கும் இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அந்தத் திரைப்படத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களான வின் டீசல், டுவெயின் ஜான்சன் நடிப்பில் 'ஹோப்ஸ் & ஷா' என்ற படம் உருவாகி வருகிறது. இது 'ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸின்' நேரடி தொடர்ச்சியாக இல்லாமல் அதன் பிரதான கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி நிகழும் தனிக் கதையாக உருவாகியுள்ளது.
வழக்கம்போல அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான சேசிங் சீக்வென்ஸ் என்று உருவாகிவரும் இத்திரைப்படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.