தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

17 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநருடன் நடனமாடிய ஷாருக் கான் - ஃபரா கான்

நடிகர் ஷாருக் கான் ‘மெயின் ஹூன் நா’ படத்தில் இடம்பெற்றுள்ள டைட்டில் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஷாரூக் கான்
ஷாரூக் கான்

By

Published : Aug 27, 2021, 1:35 PM IST

பாலிவுட் கிங் காங் என அழைக்கப்படும் ஷாருக் கான் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் 'மெயின் ஹூன் நா' (Main Hoon Na). ஃபரா கான் இயக்கிய இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுஷ்மிதா சென் நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபரா கான்- ஷாருக் கான் இணைந்து இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள டைட்டில் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

இதனைக் கண்ட ரசிகர்கள் 17 ஆண்டுகளைக் கடந்தும், அப்போது எப்படி நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தீர்களோ, அதேபோன்று இருக்கிறது எனச் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் அமிர்தா ராவ், சுஷ்மிதா சென், சயீத் கான் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் ஷாருக் கான் ராணுவ அலுவலராக நடித்திருந்தார்.

இதையும் படிங்க:'வெந்து தணிந்தது காடு' - இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details