தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது ஒரு திரைப்படம் வெளியானலே,திரையரங்கில் பேனர் வைத்து திருவிழா போல் கொண்டாடுவர்.
அந்த வகையில் ’தளபதி 64’ திரைப்படமான 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி (இன்று) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள்#MASTERFDFS என்ற ஹாஷ்டேக் மூலம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக மாஸ்டர் திரைப்படம் இன்று சொன்ன தேதிக்கு வெளியாகியிருந்தால், முதல் நாள்,முதல் காட்சி எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் வகையில் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர் .