தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘ஏ...மா ஏமி இது உனக்கு தேவையா?’ - ரசிகர்கள் அறிவுரை! - ரசிகர்கள் ஏமிக்கு அட்வைஸ்

நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏமிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

நடிகை ஏமி ஜாக்சன்

By

Published : Apr 11, 2019, 9:39 PM IST

Updated : Apr 12, 2019, 10:51 AM IST

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ஏமி ஜாக்சன். இவர், 'ஐ', தெறி, தங்கமகன், 2.O, ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து பிரபலமானார். 2.O படத்திற்கு பிறகு வேறு எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் இருந்த ஏமி லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜை காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 31ஆம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

அக்டோபரில் பிறக்கப்போகும் செல்லக் குழந்தைக்காக காத்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில், கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சன் தனது காதலர் ஜார்ஜுடன் உடற்பயிற்சி கூடத்தில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ஏமியின் ரசிகர்கள் அவர் மீதுகொண்டுள்ள அக்கறையுடன், 'கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இதுபோன்று உடற்பயிற்சி எடுக்க வேண்டாம். உடல் நலத்தை பாதிக்கும். இந்த சமயத்தில் நீங்கள் ஓய்வெடுங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து பதில் அளித்த ஏமி ஜாக்சன் இந்த இடைவெளி சிறியதுதான். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வருவேன் நிறைய படங்களில் நடிப்பேன் என கூறினார். மேலும், பிரமாண்ட முறையில் தனது சினிமா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் வகையில் ஏமியின் வீட்டில் மே 5ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர், ஏமி ஜாக்சன்- ஜார்ஜ் ஜோடியின் திருமணம் 2020ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடக்க இருக்கிறதாம்.

Last Updated : Apr 12, 2019, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details