நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திண்டுக்கல் விஜய் குடும்பம் சார்பில், நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் முன்னிலையில் தளபதி ரசிகர்கள் கேக் வெட்டியும், அவர்களுக்கு உணவுகள் வழங்கியும் கொண்டாடினர்.
குழந்தைகள் காப்பகத்தில் நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள் - Actor Vijay fans
திண்டுக்கல்: நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கொடைக்கானலில் விஜய் ரசிகர்கள் குழந்தைகள் காப்பகத்திற்குச்சென்று குழந்தைகளுடன் கேக் வெட்டி, உணவு வழங்கி கொண்டாடினர்.
நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்
தொடர்ந்து, கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம்செய்த தமுமுக கட்சியினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். விஜய் ரசிகர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'விஜய் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்'