ஷாந்தனு, அதுல்யா (Athulya Ravi), பாக்கியராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'.
இத்திரைப்படத்தில் புதுமணத்தம்பதிகளான அதுல்யாவுக்கும், ஷாந்தனுவுக்கும் திருமணத்தன்று முதலிரவானது நடக்காமல் ஒரே அறையில் இருக்க வேண்டும் எனும் சிக்கலான டாஸ்க் வழங்கப்படுகிறது.
இவ்விஷயம் நாயகி அதுல்யாவிற்குத் தெரியாது. ஷாந்தனு இந்த டாஸ்க்கில் வென்றாரா அல்லது அதுல்யாவின் முதலிரவு ஆசை வென்றதா? என்பதே திரைக்கதை. இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இருப்பினும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நாயகி அதுல்யா ரவிக்கு மட்டும் திரைப்படத்தின் மூலம் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தர்மசங்கடத்தை ஏற்படுத்திய அதுல்யா ரசிகர்
பொதுவாகவே ரசிகர்களின் அத்துமிறீய செயலால் தர்ம சங்கடமான நிகழ்வுகள் நடப்பதுண்டு. அந்தப் பட்டியலில் தற்போது நடிகை அதுல்யா ரவியும் இடம் பிடித்துள்ளார். அதுல்யாவின் ரசிகர் ஒருவர் அவருக்கு முத்தமிடும் காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முத்தமிடும் ரசிகர் தொடர்பான காணொலி காணொலியில் நிற்கும் நபர் சில விநாடிகள் சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்க்கிறார். அப்போது தனக்கு பின்னே ஒட்டப்பட்டிருக்கும் 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்பட போஸ்டரை நன்கு உற்றுப்பார்க்கிறார்.
பின்னர் போஸ்டரில் இடம்பெற்றுள்ள அதுல்யாவின் புகைப்படத்துக்கு 'பச்சக்... பச்சக்...' என முத்தமிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
இந்தக் காணொலி இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து, பலரும் ரசிகரின் செயலுக்கு தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:#Hbd ஆண்ட்ரியா : காந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆண்ட்ரியா