தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாகிஸ்தானிலிருந்து மக்கள் செல்வனுக்கு ரசிகை ட்வீட் - மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு பாகிஸ்தானிலிருந்து ரசிகை ஒருவர் ட்வீட் செய்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Vijay Sethupathi
Vijay Sethupathi

By

Published : Jan 20, 2020, 11:13 PM IST

Updated : Jan 20, 2020, 11:30 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டிவருகிறார்.

தற்போது இந்தியில் ஆமீர்கானுடன் 'லால்சிங் சாதா' என்னும் படத்திலும் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புகழ் இந்தியா மட்டுமல்லாது அண்டை நாடான பாகிஸ்தான்வரை பரவியுள்ளது. பாகிஸ்தான் ரசிகை ஒருவர் அவரை ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் சாரா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சேது காரு உங்கள் சொந்த இடங்களிலிருந்தோ, டி-நகரில் இருந்தோ வடக்கில்கூட பல ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் நான் தமிழனோ இந்தியனோ கிடையாது. இந்த ரசிகர் லாகூர் பாகிஸ்தானில் இருந்து. உங்களது அனைத்து படங்களையும் பார்ப்பேன். அதன்மூலம் நீங்கள் மிகச்சிறந்த நடிகர் என்பதை நான் உணர்ந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய்சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள், ரஜினி போன்றோர் பாகிஸ்தானில் அதிகமாக அறியப்பட்டு வந்த நிலையில் விஜய்சேதுபதி தற்போது அறியப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிங்க: 'பிளான் பண்ணி பண்ணனும்' மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

Last Updated : Jan 20, 2020, 11:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details