பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபகாலமாக புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். ஷாருக்கானின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்பதுதான் அவர் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ஆனாலும் ஷாருக்கான் அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ரசிகர்களை சந்தித்துவருகிறார். இந்நிலையில், #AskSRK ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களை சந்தித்த ஷாருக், ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.