ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் 2.O. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. சுமார் 500 கோடி செலவில் உருவான படம் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில், படத்திற்கு 'சப்டைட்டில்' எழுதி கொடுத்ததற்கு சம்பளம் இன்னும் கொடுக்கவில்லை என ரேக்ஸ் என்பவர் லைகா நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
'சம்பளம் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் லைகா' - 2.O subtitling dues
2.O படத்திற்கு சப்டைட்டில் எழுதியவர்களுக்கு லைகா நிறுவனம் இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்ச்சாட்டு எழுந்துள்ளது.
!['சம்பளம் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் லைகா'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4113252-thumbnail-3x2-ha.jpg)
ரேக்ஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, " உங்கள்(லைகா) மீது நம்பிக்கை வைத்து படத்திற்காக இரண்டு மொழிகளில் சப்டைட்டில் எழுதிக் கொடுத்தோம். படத்தில் நடித்த நடிகர்களுக்கு பணம் கொடுத்திருப்பீர்கள். அதேபோல், எங்களுக்கும் பணம் கொடுங்கள்", என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே, அந்த படத்திற்காக விளம்பரம் செய்தவர்களுக்கு லைகா பணம் தரவில்லை என சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதன்முலம் படத்தில் வேலை செய்த பலருக்கு லைகா நிறுவனம் இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.