நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் நடிகர் ராதாரவியின் பேச்சை கண்டித்து பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் தங்கள் படங்களில் நடிகர் ராதாரவியை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் பதிவிட்டுள்ள அறிக்கையில், ஒரு மதிப்புமிக்க நடிகர் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், அந்தப் படத்தின் கதாநாயகியை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். பார்வையாளர்கள் அதை ரசித்துள்ளார்கள். நயன்தாரா குறித்தும் பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் ராதாரவி பேசியது சரியல்ல. இப்போதாவது அவருக்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். இதனால் மாற்றம் ஏற்படுமா? என்பதைப் பற்றி பற்றிக் கவலை வேண்டாம். குரல் கொடுங்கள். சரியான நபர்களுக்கு கேட்கும் வரை குரல் கொடுங்கள்.
சர்ச்சை பேச்சு... ராதாரவிக்கு சிக்கல் - radharavi
நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராதாரவியை தாங்கள் தயாரிக்கும் படங்களில் ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
ராதாரவி - கோப்புப்படம்
நடிகர் சங்கம் இதனை கவனிக்கும் என்று எண்ணுகிறோம். இந்த அறிக்கையின் மூலம் நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, எங்களுடைய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று தெரிவித்து கொள்கிறோம். மேலும் திரைத்துறையில் உள்ள எங்களுடைய நண்பர்களும் நடிகர் ராதாரவியை எந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நம் பெண்களுக்கு நாம் ஆதரவளிக்காவிட்டால் வேறு யார் அளிப்பார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.