மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் திரைப்படமான “தில் பேச்சாரா” இணையதளத்தில் வெளியாகி, தற்போது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ ஆர் ரஹ்மான், தன்னால் ஏன் பாலிவுட்டில் அதிகப் படங்களுக்கு இசை அமைக்க முடியவில்லை என்பதைக் கூறிய அவர், பாலிவுட்டில் சிலர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைத் தடுப்பதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
"எனக்கு எதிராகப் பாலிவுட்டில் வதந்தி பரப்புகிறார்கள் "- ஏ ஆர் ரகுமான்! - Latest Cinima News
பாலிவுட்டில் தனக்கு எதிராக வேண்டுமென்றே சிலர் விரும்பத்தகாத வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
"தில் பேச்சாரா பட இயக்குனர் முகேஷ் சாப்ரா தன்னிடம், 'பாலிவுட்டில் சிலர் உங்களைப் பற்றி பல விதமாகப் பல கதைகள் கூறினார்கள். என்னைக் கூட உங்களிடம் போக வேண்டாம் என்றும், பாடல் இசை அமைப்பதற்கு நீங்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கூட சொன்னார்கள் என அவர் தெரிவித்தபோது தான், எனக்கு எதிராகப் பாலிவுட்டில் பலர் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது எனக்கு தெரிந்தது.
என்னைப் பொறுத்தவரை எனக்கு கிடைத்தது எல்லாம் இறைவன் கொடுத்ததாகவே நான் நினைக்கிறேன். எனக்கு எது கிடைக்க வேண்டுமோ அதை அவர் எனக்குக் கொடுப்பார். எனக்கு இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுஷாந்த் சிங் மறைவுக்கு பின் பாலிவுட்டில் வாரிசு கலாச்சாரம் மற்றும் கூட்டாக ஒன்று சேர்ந்து ஒருவரை மறைமுகமாக தாக்குவது, அவரின் வாய்ப்புகளை தடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வந்ததாக அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான், தற்போது இப்படி கூறியிருப்பது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.