நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இதுநாள் வரையிலும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே உள்ளனர்.
திரைப்பட அப்டேட், ரசிகர்களுக்கான செய்தி என எந்தவொரு அறிவிப்பையும், தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாகவே அஜித் அறிவிப்பார்.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் புதிதாக ட்விட்டர் கணக்கு ஒன்று வலம் வரத் தொடங்கியுள்ளது.
தற்போது இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.