தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்த போலி செய்தி; ஆன்லைன் மூலம் புகார்! - ஆன்லைன் புகார்

சென்னை: நடிகர் கவுண்டமணி உடல்நிலை பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் கவுண்டமணி சார்பில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கவுண்டமணி சார்பில் புகார்
நடிகர் கவுண்டமணி சார்பில் புகார்

By

Published : Oct 23, 2020, 11:40 PM IST

நடிகர் கவுண்டமணி உடல்நிலை பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சசிக்குமார் என்பவர் இந்த புகாரை ஆன்லைன் மூலம் அளித்துள்ளார்.

அதில்ம் நடிகர் கவுண்டமணி உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் சினி, தமிழ் 360 டிகிரி என்ற யூடியூப் சேனல்கள், நடிகர் கவுண்டமணியை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், இதனால் நடிகர் கவுண்டமணி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கவுண்டமணி சார்பில் புகார்

எனவே இதுபோன்று பொய்யான செய்திகளைப் பரப்பும் இந்த இரண்டு யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். புதிய படங்களில் நடித்து வருவதால் இது போன்ற செய்திகள் , பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வளைதளத்தில் பரவி வந்தன.

இது தொடர்பாக ஏற்கனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் நடிகர் கவுண்டமணி குறித்து பொய்யான செய்தி வீடியோவாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - நடிகர் கவுண்டமணி

ABOUT THE AUTHOR

...view details