மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கும் படம் ‘ட்ரான்ஸ்’. இப்படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நஸ்ரியா, கௌதம் மேனன், செம்பன் வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஃபஹத் பாசிலின் 'ட்ரான்ஸ்' பாடல் வெளியீடு! - ஃபஹத் பாசில்
ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரான்ஸ்’ படத்தின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், நஸ்ரியாவின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படம் ஐந்து காலகட்டங்களை குறிப்பாத இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இப்படத்தின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ஃபஹத் பாசில் மோட்டிவ் ஸ்பீகராக வருகிறார். அவர் மக்களுக்கு தரும் மோட்டிவ் ஸ்பீக்கை பாடலாக மாற்றியுள்ளனர். இப்பாடலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளை காட்சிப்படுத்தியுள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பின் நஸ்ரியா, ஃபஹத் பாசிலுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.