தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபகத் பாசில் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிலும் ஃபகத் பாசில் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட்.28) ஃபகத் பாசலின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.