நெடுநல்வாடை படம் குறித்து இயக்குநர் செல்வ கண்ணணிடம் ஈடிவி பாரத்தின் சிறப்பு பேட்டி, நெடுநல்வாடை கதை உருவான விதம் எப்படி?
தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்புதான் இந்தப் படம். நான் எனது தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக வைத்து அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக எடுத்துள்ளேன்
இப்படத்தில் அதிகம் நெல்லை வட்டார வழக்கு பயன்படுத்தியது ஏன்?
திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி காரன் நான் . இதுவரை தமிழ் சினிமாவில் நெல்லைத்தமிழ் சரிவர கையாளப்படவில்லை. மதுரை தமிழ், 'சுப்பிரமணியபுரம்', 'பருத்திவீரன்' ஆகிய படங்களில் மூலம் சிறப்பாக மதுரையில் பேசப்படும் வட்டார வழக்கு கையாளப்பட்டது.
தங்கர்பச்சான் 'வட ஆற்காடு' கடலூர்ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வட்டார வழக்குகளை சிறப்பாகக் கையாண்ட படங்களும் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி வட்டார வழக்கை கவனத்தில் கொண்டு இதுவரை யாரும் செயல்படவில்லை வந்த படங்கள் அனைத்தும் ஆக்ஷன் படங்களாக வந்ததால் அதில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நான் கதை எழுதும் போது திருநெல்வேலியையொட்டிதான் படமெடுக்க இருந்ததால் மொழி மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். திரைக்கதையை எழுதுவதற்கு எனக்கு இது ஈசியாக இருந்தது இதையே பேசி நடிப்பதற்கு நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.