தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Exclusive: நடிகராக பிடிக்கும்; ஆனால் இது சரியல்ல - சாய்னா நேவால் - சாய்னா நேவால் குறித்து சித்தார்த்

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பதிவிட்ட சித்தார்த் குறித்து சாய்னா நேவால் ஈடிவி பாரத்திடம் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

சித்தார்த்
சித்தார்த்

By

Published : Jan 10, 2022, 6:13 PM IST

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 5ஆம் தேதி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காகப் பஞ்சாப் மாநிலம் சென்றார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். பின், பனி மூட்டம் காரணமாகச் சாலை மார்க்கமாகச் சென்றார்.

பறக்கும் பாலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பாலத்தில் மோடி 20 நிமிடங்கள் வரை காரிலேயே காத்திருக்கும் துரதிர்ஷ்ட நிலை நேரிட்டது. பஞ்சாப் அரசின் இந்தப் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக தனது பயணத்தை ரத்துசெய்து பிரதமர் திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிக்கொள்ள முடியாது.

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிலளித்திருந்தார்.

இவரின் கருத்துக்கு சிவசேனா கட்சியின் மாநிலங்களவை பெண் எம்பி, நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

இது குறித்து சாய்னா நேவால் நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "ஒரு நடிகராக எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் இது நல்லா இல்லை" என்றார்.

இதையும் படிங்க: பெண்கள் குறித்து இழிவான கருத்து - சித்தார்த் மீது வழக்குப்பதிவு?

ABOUT THE AUTHOR

...view details