தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Exclusive: பதுகம்மா பாடல் எப்படி உருவானது? - இயக்குநர் கெளதம் மேனன் - பதுகம்மா பாடல்

தெலங்கானாவில் கொண்டாடப்படும் பதுகம்மா விழாவையொட்டி, கெளதம் மேனன் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தப்பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்து கெளதம் மேனன் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்துள்ளார் .

கெளதம் மேனன்
கெளதம் மேனன்

By

Published : Oct 5, 2021, 8:41 PM IST

Updated : Oct 5, 2021, 10:34 PM IST

நவராத்திரி விழா நடைபெறும் காலகட்டத்தில் தெலங்கானா மாநிலத்தில் பதுகம்மா விழா கொண்டாடப்படும். பெண்களால் கொண்டாடப்படும் இந்த விழாவை மலர்த் திருவிழா என்று அழைப்பார்கள்.

ஒன்பது நாள்கள் நடைபெறும் விழாவில் பெண்கள் வண்ண வண்ண உடைகள், ஆபரணங்கள் அணிந்து வித்தியாசமான பூக்களைக் கொண்டு, கோலம்போட்டுக் கொண்டாடுவர். இது தெலங்கானாவின் கலாச்சார திருவிழாவாக பார்க்கப்படுகிறது.

இந்த திருவிழாவையொட்டி கெளதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். சுரேந்தர் பாடல் எழுத, கே.கவிதா தயாரித்துள்ளார். இந்த பாடல் இன்று (அக்.5) வெளியாகியுள்ளது

இந்நிலையில் பதுகம்மா பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: பதுகம்மா விழா குறித்து நிறைய பாடல்கள் உள்ளன. உங்கள் பாடலுக்கும் முந்தைய பாடல்களுக்கும் என்ன வித்தியாசம்?

கெளதம் மேனன்: நான் பதுகம்மா பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் உருவாக்கியுள்ளேன். முந்தைய பாடலுக்கும், என் பாடலுக்கும் இசை தான் வித்தியாசம்.

ஆரம்பக்கால பாடல்கள் நாட்டுப்புறத்துடன் பாரம்பரியம் கலந்து இருந்தது. அதனால் நான் ரஹ்மானிடம் பாடலை வித்தியாசமாக உருவாக்கலாம் என தெரிவித்தேன். அவருக்கும் அது சரி என தோன்றியது. அந்த சூழ்நிலையில், நாட்டுப்புற இசையை மனதில் வைத்து, இந்த பாடலை கிளாசிக் வகையில் உருவாக்கினார்.

இயக்குநர் கெளதம் மேனனுடன் பேட்டி

என்னைக் கேட்டால் இதுமிகவும் அற்புதமானபாடல் என்றே சொல்லுவேன். வணிக ரீதியாக இந்த பாடலை அவர் உருவாக்கவில்லை. இந்த பாடலை நாங்கள் ஷூட் செய்தபோது அதனை அனைவரும் மிகவும் ரசித்தனர். பாடலுக்கு ஒரு அழகியல் தோற்றத்தைக் கொடுத்திருக்கிறேன்.

ஒரு இளம் பெண்ணின் பார்வையிலிருந்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலும், என் படங்களிலுள்ள பெண் கதாபாத்திரங்களும் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. மேலும், இந்தப் பாடல் முற்றிலும் பெண்மை குறித்து உருவாக்கப்பட்டது.

கேள்வி: இந்த விழா ஒரு நாட்டின் விழா கூட இல்லை. ஒரு மாநிலத்தின் விழா தான். அப்படி இருக்கையில் உங்களை போன்ற நட்சத்திரம் இந்த பாடலை உருவாக்க முன் வந்ததற்கான காரணம் என்ன?

கெளதம் மேனன்: நாங்கள் மிகப் பெரிய நட்சத்திரம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, இந்த பாடலை எனது ஆர்வத்தின் அடிப்படையில் தான் படமாக்கினேன். முன்னதாக, கேரளா, பஞ்சாப் போன்ற பிற மொழியில் கூட இதுபோன்ற விழாவிற்கு நான் பாடல் அமைத்திருந்தேன். ரஹ்மானின் இசை, தெலங்கானாவின் கலாச்சாரத்தில் இந்த பதுகம்மா பாடல் தனித்துவமாக இருக்கும்.

இதையும் படிங்க:ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி: படப்பிடிப்பு தொடக்கம்

Last Updated : Oct 5, 2021, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details