தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கடவுள் என்ன கரோனா கூட 'க்ளைமேக்ஸ்' வெளியாவதைத் தடுக்க முடியாது - ராம்கோபால் வர்மா - ராம்கோபால் வர்மாவின் க்ளைமேக்ஸ்

தனது இயக்கத்தில் உருவாகியுள்ள 'க்ளைமேக்ஸ்' படத்தின் வெளியீட்டை யார் நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.

ram
ram

By

Published : May 20, 2020, 8:17 AM IST

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிநாட்டு நடிகை மியா மல்கோவா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'க்ளைமேக்ஸ்'. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (மே 18) வெளியானது.

பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட மியா, அங்கு சந்திக்கும் பிரச்னைகளைத் திகிலாகவும் ஹாட்டாகவும் அமைத்துள்ளனர் படக்குழுவினர். பாலைவன சேஸிங் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, சமூகவலைதளத்தில் இந்த ட்ரெய்லர் பிரபலமானது. அதுமட்டுமல்லாது ரசிகர்களும் இந்த படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் மே 29ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

படம் வெளியாவது குறித்து ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "கடவுளை மறந்து விடுங்கள்... கரோனா கூட 'க்ளைமேக்ஸ்' படம் ஆன்லைனில் ரிலீஸ் ஆவதைத் தடுக்க முடியாது. க்ளைமேக்ஸ் படம் வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு ராம் கோபால் வர்மா வேர்ல்டு தியேட்டரின் ஷ்ரேயா செட் ஆப்பில் ரிலீஸ் ஆகும்"என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் ஒருபுறம் வாழ்த்து சொன்னாலும் மற்றொருபுறம் ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்திற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details