இயக்குநர் பாண்டிராஜ் - சூர்யா கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'டாக்டர்' பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வினய் ராய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
எதற்கும் துணிந்தவன் தயாரிப்பு நிறுவனம் ட்வீட் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, பின்னணிப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
பின்னர் இத்திரைப்படம் தமிழ்நாடு அரசு விதித்த கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படமானது வருகின்ற மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது.
இதையும் படிங்க:த்ரில்லர் திரைக்கதையில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் 'டைகர்'?