நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இவரது பிறந்தநாளுக்குப் பரிசு கொடுக்கும்விதமாக அவரின் 40ஆவது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரைப் படக்குழு நேற்று (ஜூலை 22) வெளியிட்டது. 'எதற்கும் துணிந்தவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
இதனையடுத்து தற்போது, 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. வித்தியாசமான லுக்கில் இருக்கும் சூர்யாவின் அப்போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ஒரேநாளில் மூன்று போஸ்டர்கள் வெளியானதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
தொடர்ந்து சூர்யா நடித்துவரும் 39ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:இதுக்கு ஒரு முடிவே இல்லையா: 'பிச்சைக்காரன் 2' இயக்கும் புதிய இயக்குநர் யார்!