சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் அனைவரும் பாராட்டும் வகையில் ஒரு சிறப்பான செயலை செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், அங்கு பணியாற்றிய பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை மனதில் வைத்து ஈஸ்வரன் படக்குழுவினர் சார்பாக திரையரங்கு பணியாளர்களுக்கு பொங்கல் சீர் வழங்கப்பட்டு வருகிறது.