பழம்பெரும் பாலிவுட் நடிகை ஹேமா மாலினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், நடன கலைஞர் மற்றும் அரசியல்வாதியாகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.
இதுகுறித்து அவரின் மகளும், நடிகையுமான ஈஷா விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் அம்மா ஹேமா ஆரோக்கியமாக உள்ளார். அவரது உடல்நிலை குறித்து வெளியான செய்தி முற்றிலும் போலியானது. தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.