தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பேனர் வைப்பதில் கட்டுப்பாடுகள் - சுவர் விளம்பரத்திற்கு மாறிய ரஜினி ரசிகர்கள்! - ரஜினி மக்கள் மன்றத்தினர்

ஈரோடு: பேனர் வைப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதால் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ரஜினி மக்கள் மன்றத்தினர் சுவர் விளம்பரத்திற்கு மாறியுள்ளனர்.

erode
erode

By

Published : Dec 11, 2019, 7:34 AM IST

டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினியின் 70ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் திட்டமிட்டுள்ளனர்.

பிளக்ஸ், பேனர்கள் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி ரஜினி ரசிகர்கள், மன்றத்தினர் சுவர்களில் ரஜினி படத்தை வரைந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சுவற்றில் வரையப்பட்ட ரஜினியின் ஓவியம்

அந்த வகையில் சத்தியமங்கலம் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஆற்றுப்பாலம் அருகேயுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தின் சுவரில் டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தநாள் காணும் தலைவா சிம்மாசனம் எப்போது என்ற வாசகங்கள் எழுதப்பட்ட ரஜினியின் படம் வரையப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள், "பிளக்ஸ், பேனர்கள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுவர் விளம்பரத்திற்கு மாறியுள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ரசிகர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கை வீண் போகாது' - ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details