தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிவகார்த்திகேயன் வெளியிடும் ‘எண்ணித்துணிக’ டீசர் - ENNI THUNIGA TEASER

’எண்ணித்துணிக’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். தற்போது இதன் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார்.

ENNI THUNIGA TEASER
ENNI THUNIGA TEASER

By

Published : Sep 8, 2021, 9:39 PM IST

சென்னை: இயக்குநர் வசந்த், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ரவி.கே. சந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் வெற்றிச்செல்வன். இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘எண்ணித்துணிக’. சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துவரும் இப்படத்தில் ஜெய், அதுல்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புதுமுக இயக்குநர் வெற்றிச்செல்வனுடன், வல்லினம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோஸப், ‘விக்ரம் வேதா’ புகழ் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், ‘96’ கார்த்திக் நேத்தா, ’சத்தம் போடாதே’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜே.பி தினேஷ் குமார் என முத்திரை பதித்த கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர். முருகன் என்பவர் சண்டைப் பயிற்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படம் ஜெய்க்கு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். தற்போது இதன் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார். நாளை (செப்.9) இரவு 7 மணிக்கு சிவகார்த்திகேயன் இதன் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

சிவகார்த்திகேயன் வெளியிடும் ‘எண்ணித்துணிக’ டீசர்

இதையும் படிங்க:‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் விவகாரம்: சூர்யா தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details