இயக்குநர்கள் வசந்த் சாய் மற்றும் ரவி கே. சந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.கே. வெற்றிச்செல்வன். இவர் நடிகர் ஜெய்யை வைத்து தற்போது “எண்ணித்துணிக” என்ற தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார்.
எண்ணித்துணிக ஆடியோ உரிமையை வாங்கியது திங்க் மியூசிக் - வெற்றிச்செல்வன்
சென்னை: ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித்துணிக திரைப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
எண்ணித்துணிக
ரெயின் ஆஃப் ஏரோஸ் (Rain Of Arrows) என்ட்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். ஜெய்யுடன் அதுல்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் சூழலில் படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் எண்ணித்துணிக திரைப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
Last Updated : Sep 7, 2021, 2:17 PM IST