பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'என்னங்க சார் உங்க சட்டம்' - முதல் பாடல் வெளியீடு
சென்னை: 'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் முதல் பாடலான 'சீரக பிரியாணி' என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குணா பாலசுப்ரமணியம் இசையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான சீரக பிரியாணி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ரோகினி கார்த்திக், ஜூனியர் பாலையா, மெட்ராஸ் மீட்டர் கோபால், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இது முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றிப்போகச் செய்யும் பொழுதுபோக்குப் படமாக அமையும் எனப் படக்குழு உறுதியாக நம்புகின்றது. இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.